முக்கிய செய்திகள்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நாளை தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு
NEET UG 2025 : நீட் தேர்வு முறையில் மாற்றம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 SmartClassroom
👉 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக் கல்வித் துறை சாதனை அரசாணை வெளியீடு! 👉 NMMS தேர்வு விண்ணப்பம் - ஜன.29 வரை அவகாசம் நீட்டிப்பு!
👉 NEET UG 2025 : நீட் தேர்வு முறையில் மாற்றம்.!
Thursday, 30 January 2025
Wednesday, 29 January 2025
குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியான பட்டதாரிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2024 செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர்.
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29,809 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அடுத்தபடியாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். அந்த தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும 23-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்றர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
Sunday, 26 January 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.
1.மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
- தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் பொருந்தும்.
2.குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் .
3.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
4.பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது ராஜினாமா செய்தவர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் கிடைக்காது.
5.நிதியமைச்சகத்தின் இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர், கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த தேசிய ஓய்வூதிய திட்டம், மற்றும் தற்போதைய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- January 2025 (5)
-
1.மத்திய அரசு ஊழியர்களுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர...

.jpg)